கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த வைத்தியர் நெவில் பெர்னாண்டோ காலமானார்!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மாலபே நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் நிறுவுநர் வைத்தியர் நெவில் பெர்ணாண்டோ காலமாகியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை்த தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. தனது 89ஆவது வயதில் இன்று (வியாழக்கிழமை) மாலை அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.