கொரோனா தொற்று: வட மத்திய மாகாண முதல்வரின் அலுவலகம் மூடப்பட்டது
In இலங்கை December 28, 2020 8:37 am GMT 0 Comments 1481 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்று உறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து வட மத்திய மாகாண முதல்வரின் அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்று உறுதியானவருடன் தொடர்புடைய அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும் முதல்வரின் அலுவலக வளாகத்தில் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் அன்றாட நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.