கொரோனா நோயாளர் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்!

கொரோனா நோயாளர் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்றிரவு (செவ்வாய்கிழமை) 7.30 மணியளவில் புனானை சிகிச்சை நிலையத்திலிருந்து குறித்த நோயாளர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ – மீதொட்ட பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் பணியாற்றும் குறித்த ஊழியர் கடந்த 13 ஆம் திகதி PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 17 ஆம் திகதி, கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
43 வயதான குறித்த நோயாளர், போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டதை தொடர்ந்து, இதுவரை 14 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை நிலையங்களிலிருந்து தப்பிச் சென்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.