கொரோனா வைரஸுடன் வாழ்வதே சவால்: நாடு முடக்கப்படாது – அரசாங்கம்
In இலங்கை February 17, 2021 3:45 am GMT 0 Comments 1269 by : Dhackshala

நாடு முடக்கப்பட்டால் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், நாட்டை முடக்கும் எண்ணம் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸுடன் வாழ்வதே எங்களுக்கு முன்னால் உள்ள சவால் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட உதய கம்மன்பில, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் நான்காவது முறையாக முடக்கத்தை அமுல்படுத்தியுள்ளன.
எனினும் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டு முடக்கம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் வேலை இழந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் முடக்கத்தின்போது நாட்டை நிர்வகிக்கக்கூடிய பொருளாதார வலிமை இலங்கைக்கு இல்லை என்றும் தாங்கள் அதை செய்ய விரும்பினாலும்கூட முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் விளைவாக, நாட்டை முடக்காது கொரோனா வைரஸ் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுடன் வாழ்வதே எங்களுக்கு முன்னால் உள்ள சவால் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொற்று நோய் மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் உள்ளனர் என்றும் ஆனால் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் பாதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் சரியான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டால், யாரேனும் பாதிக்கப்பட்டவர்களிடையே இருந்தாலும் வைரஸ் பாதிக்காது என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறிருப்பினும் ஒருமுறை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா காலையில் ஊரடங்கு உத்தரவு இருக்காது என்று அறிவித்திருந்த போதிலும் மாலையில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுவதாக அறிவிக்க வேண்டியிருந்தது.
இதன் விளைவாக, கொரோனா வைரஸ் தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய முடிவுகளை தீர்மானிக்க முடியாது என்றும் கம்மன்பில கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.