கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்- காலியின் சில இடங்களுக்கு பயணக் கட்டுப்பாடு
In ஆசிரியர் தெரிவு December 17, 2020 4:42 am GMT 0 Comments 1372 by : Yuganthini

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், காலியில் சில பகுதிகளுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுள்ளது.
காலி நகரசபைக்குட்பட கடுகொட பிரதேசத்தின் சில பகுதிகளுக்கே இவ்வாறு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுள்ளதாக அம்மாவட்ட துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுகொட பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 14 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே, அப்பகுதியில் மூன்று இடங்களில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காலி நகர சபைக்குட்பட்ட மேலும் 07 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் இவ்வாறு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.