கொரோனா வைரஸ் உலகிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது – உலக சுகாதார ஸ்தாபனம்!

கொரோனா வைரஸ் உலகிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மருந்துகள், நோய் கண்டறிவது மற்றும் தடுப்பூசிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவது தொடர்பாக இரண்டு நாள் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஜெனரல் டெட்ரோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.
40 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் தற்போது அவசர நிலையாகி உள்ளது. கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கு கடுமையான அச்சுறுத்தலைத் தந்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.