கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து விவாதிக்க அரசாங்கத்தின் அவசரக் குழு சந்திப்பு
In இங்கிலாந்து January 24, 2020 2:16 pm GMT 0 Comments 2553 by : shiyani

சீனாவில் பரவிவரும் கொடிய கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து விவாதிப்பதற்காக சுகாதார அமைச்சர் மற் ஹான்கொக் தலைமையில் பிரித்தானிய அரசாங்கத்தின் அவசரக் குழு இன்று கூட்டப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சு, வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் போக்குவரத்து, கல்வி மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் இந்த கூட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பதினான்கு பேர் இந்த வைரஸ் தாக்கத்துக்காக பரிசோதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் ஐந்து பேர் தாக்கப்படவில்லை என்பது தெரிவாகியுள்ள நிலையில் ஒன்பது பேரின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 26 பேர் இறந்துள்ளனர், 800 க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டுள்ளனர். ஹூபே மாகாணம் பூட்டப்பட்டதால் குறைந்தது 33 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.