கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுகிறது : பிரித்தானியாவில் 90 பேர் பாதிப்பு
In இங்கிலாந்து March 5, 2020 12:31 pm GMT 0 Comments 2362 by : S.K.Guna

கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுகின்ற நிலையில் பிரித்தானியாவில் இதுவரையில் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் இரண்டாம் கட்ட நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றனர் என்று தலைமை மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் கிறிஸ் விற்றி கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் இப்போது பாதிக்கப்பட்டுள்ள சிலருக்கு வெளிநாட்டுப் பயணத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்கொட்லாந்தில் மூன்று புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து பிரித்தானியாவில் பாதிப்புக்குளானவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் நான்கு வகையாக உள்ளன. நாடு இப்போது தாமதக் கட்டத்தில் உள்ளது.
தாமதக் கட்டத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்பது குறித்து தீர்மானிக்கப்பட்டுவருகிறது.
மக்கள் ஒன்றுகூடுவதைத் தடைசெய்வது, பாடசாலைகளை மூடுவது, மக்களை வீட்டிலிருந்து வேலைசெய்ய ஊக்குவிப்பது மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பது ஆகியவை இந்தத் தாமதக்கட்டத்தில் அடங்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நன்றி bbc.co.uk
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.