கொரோனா வைரஸ் பரவலானது இன்னும் சமூகத்தில் அதிகம் பரவவில்லை என தெரிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவலானது இன்னும் சமூகத்தில் அதிகம் பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய, 3.5 தொடக்கம் 4 சதவீதமானோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
5 சதவீதத்தை கடக்கும் பட்சத்திலேயே சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதாக கருத முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.