கொரோனா வைரஸ் மருந்து இலங்கைக்கு கிடைக்கும் நாள் குறித்து அறிவிப்பு
In ஆசிரியர் தெரிவு December 5, 2020 3:16 am GMT 0 Comments 2260 by : Yuganthini

உலகசுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மருந்து, பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு கிடைக்கலாம் என மருந்தகங்களை ஒழுங்குபடுத்துதல்,உற்பத்தி விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக சன்ன ஜெயசுமன மேலும் கூறியுள்ளதாவது, “சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் இரு குழுக்களை அமைத்துள்ளனர்.
மேலும், அமெரிக்கா, ரஸ்யா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில்,கொரோனா வைரஸ் மருந்தினை எந்த நாட்டிடமிருந்து பெறுவது என்பது குறித்து நாங்கள் திறந்த மனதுடன் இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.