கொரோனோ தடுப்பூசி தயாரிக்கும் ஜைடஸ் காடிலா நிறுவனத்தில் பிரதமர் மோடி ஆய்வு
In இந்தியா November 28, 2020 9:18 am GMT 0 Comments 1326 by : Jeyachandran Vithushan

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை, பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு மருந்து தயாரிக்க இந்தியாவில் 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.
இதில் 3 மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
முதல்கட்டமாக குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள ஜைடஸ் காடிலா நிறுவனம் மேற்கொள்ளும் ஜைகோவ்-டி என்ற தடுப்பூசியின் 2 ஆம் கட்ட பரிசோதனையை பிரதமர் மோடி சென்று பார்வையிட்டதுடன் மருந்து தயாரிப்பு நிலைகள் குறித்து ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தார்.
அந்நிறுவனம் தயாரித்த து. அகமதாபாத் பயணத்தை முடித்துக்கொண்டு புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனங்களிலும் பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார்.
ஜைடஸ் நிறுவனம் உருவாக்கி வரும் உள்நாட்டு மரபணு சார்ந்த மருந்து குறித்து அதிகம் தெரிந்துகொள்ள அகமதாபாத்தில் உள்ள அந்நிறுவனத்துக்கு சென்றதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து பயணத்தில் ஜைடஸ் நிறுவனத்துக்கு முழு ஒத்துழைப்பை இந்திய அரசு அளிக்கும் என்றும் மோடி டுவிட்டரில் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் குழுவுக்கு பிரதமர் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.