கொலை சதித்திட்டம்: நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிப்பு

ஜனாதிபதி மைத்திரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதிவரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டா உள்ளிட்ட பிரமுகர்களை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதில் நாலகவிற்கும் பங்குண்டு என ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளரான நாமல் குமார தகவல் வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர் ஐந்து நாட்கள் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவந்த நாலக டி சில்வா, கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.