கொள்ளுபிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழப்பு
In இலங்கை December 30, 2020 3:29 am GMT 0 Comments 1537 by : Dhackshala

கொழும்பு – கொள்ளுபிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் நீரில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பெய்த மழையினால் கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் கீழ்தளமே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.
குறித்த கட்டட நிர்மாணப்பணியில் ஈடுபடுகின்ற ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் குறித்த கட்டடத்தின் கீழ்தளத்தில் மேலும் 5 பேர் சிக்கி இருந்த நிலையில் அவர்கள் இன்று காலை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.