கொழும்பின் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது
In ஆசிரியர் தெரிவு December 12, 2020 2:08 am GMT 0 Comments 1780 by : Rahul

கொழும்பு நகரின் சிலபகுதிகளில் தனிமைப்படுத்தல் செயற்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) காலை, தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் கொழும்பு நகரின் மட்டக்குளிய ரன்திய உயன, மோதரை, மெத்சந்த செவன, முகத்துவாரம், மிஹிஜய செவன, கிராண்ட்பாஸ், சமகிபுர, தெமட்டகொடை, மிஹிந்துசெத்புர ஆகிய தொடர்மாடி குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொழும்பு நகரில் 7 தொடர்மாடி குடியிருப்பு தொகுதிகளில் தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.