கொழும்பின் பல வீதிகளுக்கு பூட்டு – மக்களே அவதானம்
In இலங்கை January 26, 2020 4:14 am GMT 0 Comments 2020 by : Dhackshala

கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 72ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்கமைய, இன்று (ஞாயிற்றுக்கிழமை), எதிர்வரும் 31 மற்றும் எதிர்வரும் 2, 3ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தினங்களில் காலை 6 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.