கொழும்பில் ஒரே நாளில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்
In ஆசிரியர் தெரிவு December 15, 2020 3:34 am GMT 0 Comments 1574 by : Yuganthini

இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரையான 24 மணித்தியாலத்தில் 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்திலேயே நேற்றைய தினம் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 200 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 113 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 55 பேரும் நுவரெலியாவில் 38 பேரும் கண்டி மாவட்டத்தில் 16 பேரும் வவுனியா மாவட்டத்தில் 07 பேரும் யாழ். மாவட்டத்தில் 06 பேரும் மட்டக்களப்பில் ஒருவரும் அம்பாறையில் 28 பேரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 481ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.