கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளை விடுவிப்பதற்கு திட்டம் – சவேந்திர சில்வா
In இலங்கை December 10, 2020 9:09 am GMT 0 Comments 1473 by : Dhackshala

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த தொடர்மாடி குடியிருப்புக்களில் வசிப்பவர்களுக்கு PCR மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை விரைவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானோர் கொழும்பு – 15 முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி இதன்போது கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்த பகுதிகளில் சுமார் 14 தொடர்மாடி குடியிருப்புகள் 06 வாரங்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைய இந்த தொடர்மாடி குடியிருப்புகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, தொடர்மாடி குடியிருப்புகளில் இதுவரை PCR அல்லது அன்டிஜன் சோதனைகளை மேற்கொள்ளாதவர்களுக்கு விரைவாக அவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.