கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் விடுவிப்பு
In இலங்கை December 28, 2020 2:20 am GMT 0 Comments 1444 by : Dhackshala
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய டேம்வீதி, வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பொலிஸ் அதிகாரப் பிரிவுகள் இன்று காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேகந்த மற்றும் ஹூனுப்பிட்டிய கிராமசேகவர் பிரிவுகளும் இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும் வெள்ளவத்தை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட மயூரா பிரதேசம், பொரளை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட ஹல்கஹவத்த, காளிபுள்ளவத்தை மற்றும் வெல்லப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்சந்த செவன என்பனவும் இன்று காலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் வாழைத்தோட்டம் பொலிஸ் அதிகார பிரிவுக்கு உட்பட்ட புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 5 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சில பகுதிகளும் கொடக்கவல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சில பகுதிகளும் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மின்னன, விலேகொட, யகுடாகொட, அஸ்கஹகுல வடக்கு, போபெத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என
அத்துடன் கொடக்கவல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இறக்குவானை நகரம், இறக்குவானை வடக்கு, இறக்குவானை தெற்கு, மஸ்சிம்புல மற்றும் கொட்டல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.