கொழும்பின் நிலை ஆபத்தில் – ரோஸி சேனாநாயக்க எச்சரிக்கை
In ஆசிரியர் தெரிவு November 30, 2020 4:12 am GMT 0 Comments 1796 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அதிகமான மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதால் கொழும்பில் நிலைமை ஆபத்தாக உள்ளது என கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க எச்சரித்துள்ளார்.
அண்மையில் பதிவானாக கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள் மற்றும் தொற்று உறுதியான நோயாளிகள் பெரும்பாலும் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில் ஓய்வுபெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் சேவைகளைப் பெற மருத்துவ பீடத்தின் உதவியையும் ரோஸி சேனாநாயக்க நாடியுள்ளார்.
தற்போது கொழும்பில் ஒரு நாளைக்கு மேற்கொள்ளப்படும் 991 பி.சி.ஆர் சோதனைகளில் 249 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியும்போது, அது ஒரு தீவிரமான பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு கொழும்பின் நிலைமையைக் கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபைக்கு தனியார் மற்றும் வெளிநாட்டு தரப்பினர்களிடம் இருந்து நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.