கொழும்பில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
In இலங்கை December 30, 2020 5:29 am GMT 0 Comments 1731 by : Dhackshala

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 460 கொரோனா தொற்றாளர்களில் 249 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அவர்களில் அவிசாவெலப் பகுதியில் 29 பேர், அளுத்கடை பகுதியில் 28 பேர் மற்றும் மட்டக்குளி பகுதியில் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
அத்தோடு, கொள்ளுப்பிட்டி பகுதியில் 22 பேர், பொரளை பகுதியில் 20 பேர் மற்றும் கொம்பனி வீதியில் 15 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் வெலிக்கடை சிறைச்சாலையில் 18 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 52 பேர், கண்டி மாவட்டத்தில் 38 பேர், காலி மாவட்டத்தில் 29 பேர், மாத்தறை மாவட்டத்தில் 16 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு, யாழ்ப்பாண மாவட்டத்தில் 11 பேர், குருணாகல் மாவட்டத்தில் 10 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 05 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 04 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 03 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 02 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 02 பேர், மொனராகலை மாவட்டத்தில் 02 பேர் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் புத்தளம், மாத்தளை, கேகாலை, திருகோணமலை, பதுளை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 07 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.