கொழும்பில் மாத்திரம் 11ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று- 101 மரணங்கள்!

கொழும்பு மாநகரசபை எல்லைப் பகுதிகளில் மாத்திரம் நேற்று வரை 11ஆயிரத்து 226 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுவரை 101 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பு மாநகர எல்லைக்குள் 58 ஆயிரத்து 35 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், நேற்று மாத்திரம் 950 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 150 ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளும் இடம்பெற்றன.
அத்துடன், ஆரம்பத்தை விட ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற போதும் சில பிரதேசங்களில் இன்னும் கொரோனா பரவல் தொடர்ந்து இருந்துவருவதாக ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பண்டிகை காலத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதன் மூலமும் தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வதன் மூலமும் இந்த நிலையைக் கட்டுப்படுத்தலாம என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.