கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் 16 மணிநேர நீர்வெட்டு
In இலங்கை February 20, 2021 3:15 am GMT 0 Comments 1243 by : Dhackshala

கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதனடிப்படையில் கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸ, கோட்டே மற்றும் கடுவல ஆகிய மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள் மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
அத்துடன் கொட்டிகாவத்த மற்றும் முல்லேரியா ஆகிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.
அத்தியவசிய திருத்த வேலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.