கொவிட்-19 தடுப்பூசி அடுத்த இரண்டு வாரங்களில் பராமரிப்பு இல்லங்களுக்குச் விநியோகிக்கப்படும்!
In இங்கிலாந்து December 5, 2020 10:04 am GMT 0 Comments 1754 by : Anojkiyan

கொவிட்-19 தடுப்பூசி அடுத்த இரண்டு வாரங்களில் பராமரிப்பு இல்லங்களுக்குச் செல்ல நிச்சயமாக தயாராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் சுகாதார தயாரிப்புகள் ஒழுங்குமுறை நிறுவனம் (எம்.எச்.ஆர்.ஏ) பராமரிப்பு இல்லங்களுக்கு மருந்துகள் விநியோகிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் பொருள், பராமரிப்பு இல்லவாசிகள் மற்றும் ஊழியர்கள் முதன்முதலில் முன்னுரிமையாக இருந்தபோதிலும், தடுப்பூசிகளை போடுவர்களில் முதன்மையானவர்கள் அல்ல.
ஆனால், இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரிகள் இந்த தடுப்பூசி குளிர்கால மருத்துவமனை எண்களில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.
அவர்கள் கூறியதாவது, ‘தடுப்பூசிகளைப் பற்றிய மிகவும் வரவேற்கத்தக்க செய்தி 2021ஆம் ஆண்டை அதிக நம்பிக்கையுடன் எதிர்நோக்க முடியும் என்பதாகும் என்றாலும், அடுத்த மூன்று மாதங்களில் கொவிட் உடன் சுகாதார சேவையில் வரும் எண்ணிக்கையை குறைப்பதில் தடுப்பூசி பயன்படுத்துவது ஒரு சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும்’ என கூறினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.