கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர்!

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் லீ சியன் லூங், நேற்று (வெள்ளிக்கிழமை) தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் ஃபைஸர் உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
சுகாதாரப் பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமையிலிருந்தும் முதியோருக்கு அடுத்த மாதத்திலிருந்தும் இன்னும் பரவலாக கொவிட்-19 தடுப்பூசி போடப்படவுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 58ஆயிரத்து 836பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 29பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.