கொவிட்-19 விதிகளைப் பின்பற்றாத மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு அபராதம்!

மொத்த விற்பனை நிறுவனமான கோஸ்ட்கோவுக்கு கொவிட்-19 விதிகளைப் பின்பற்றாததற்காக, அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வின்னிபெக்கில் உள்ள மெக்கிலிவ்ரே நிழற்சாலையில் உள்ள கோஸ்ட்கோ அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யதாக நிரூபிக்கப்பட்தையடுத்து 5,000 அமெரிக்கா டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாகாணம் நெருக்கடியான நிலையில் இருப்பதால், சில்லறை விற்பனையாளர்கள் கடையில் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்க முடியும்.
அத்தியாவசியமற்ற தயாரிப்புகளை இணையத்திலும் தொலைபேசியிலும் கொள்வனவு செய்யலாம் அல்லது எடுக்கலாம்.
சமீபத்தில், மாகாணத்தில் உள்ள மக்களும் வணிகர்களும் ஒரே வாரத்தில் 126,000 டொலருக்கும் அதிகமான கொவிட்-19 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.