கோட்டாவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் மங்கள- பொதுஜன பெரமுன
In ஆசிரியர் தெரிவு April 19, 2019 2:46 am GMT 0 Comments 2358 by : Dhackshala

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டதன் பின்னணியில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர செயற்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும்பொதே நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் துணையுடன் அமைச்சர் மங்கள சமரவீர கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக இந்த வழக்கினை பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நாட்டில் இடம்பெறவுள்ளமையினால், அதில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதுடன், அதற்காக தமது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளையும் கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டிருக்கிறார்.
இவ்வாறான சூழ்நிலையில் கோட்டா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் கைகள் இதில் இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.