கோட்டாவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்வதற்கு நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியை பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ வைத்தியப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்ல உள்ளதால் அதற்கு அனுமதி வழங்குமாறு அவரது சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.