கோட்டாவை எதிர்கொள்ள ஐ.தே.க.தயார்- ரவி
In ஆசிரியர் தெரிவு August 9, 2019 8:29 am GMT 0 Comments 1726 by : Yuganthini
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தயாராகவே உள்ளதென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ரவி மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை தனதாக்கக் கூடிய வகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கூட்டணி அமையும்.
அந்தவகையில் எதிரணியில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா, நிறுத்தப்படுவாராயின் மிக்க சந்தோசம். நாம் அவருக்கு எதிராக போட்டியிடுவதற்கு தயாராகவே உள்ளோம்.
எமது கட்சியை சேர்ந்த சிலர் கோட்டாவை சந்தித்ததாக கூறும் ஊடகச் செய்திகள் உண்மையானவைகள் அல்ல.
இதேவேளை எமது கட்சி சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய, சரத் பொன்சேக்கா ஆகியோரின் பெயர்களே பெரும்பாலானோர்களால் முன்மொழியப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.