‘கோலமாவு கோகிலா’ படத்தின் கதை இதுதான்

தமிழ் சினிமாவில் லேடி சுப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தரா, எப்போது கதைகளை தேர்வு செய்து நடிக்க கூடியவர்.
அத்தோடு ‘மாயா’, ‘அறம்’ போன்ற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களிலும் நடித்து வெற்றிகண்டவர் நயன். இந்நிலையில், அந்த வரிசையில் அவர் தற்போது ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் இயக்கும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறனர், அனிருத் இசை அமைக்கிறார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்,
இதற்கிடையில், இப்படத்தின் கதை கசிந்துள்ளது. வெளியான கதை பிரகாரம், கோலமாவு விற்று வாழ்க்கை நடத்தும் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் கோகிலா. குடும்பத்தின் வறுமையை போக்க கடுமையாக உழைக்கிறார். யாரும் துணையில்லாத ஒரு ஏழை குடும்பத்தில் ஒரு பெண் அழகாக இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வருமோ அதெல்லாம் வருகிறது. அதையெல்லாம் சமாளிக்கிறார். இந்த போராட்டத்துக்கு இடையில் ஒரு கொலை பிரச்சினையிலும் சிக்கிக் கொள்கிறார். இதனால் வில்லன்களும் அவரை துரத்துகிறார்கள். கோகிலாவிடம் இருப்பது அழகு என்ற ஆயுதமும், புத்திசாலித்தனமும். இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு எதிரிகளை சமாளித்து, தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கோகிலாவின் கதை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.