கோல்டன் குளோப் விழாவில் திரையிடப்படவுள்ள முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள்!
In சினிமா December 21, 2020 10:52 am GMT 0 Comments 1194 by : Krushnamoorthy Dushanthini

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 78வது கோல்டன் குளோப் விருது விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது .
இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சில விதிமுறைகளை மாற்றி அமைத்திருந்தனர் . அதன்படி ஒடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களும் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளில் போட்டியிட தகுதியானவை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி இந்த விழாவில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படமும், சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படமும் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.