கோவிட் பாதுகாப்புடன் கோடை காலத்திற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் அவுஸ்ரேலியா
In அவுஸ்ரேலியா December 6, 2020 2:53 am GMT 0 Comments 1688 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்று எதுவும் பதிவாகாமல் பாதுகாப்பான விடுமுறை காலத்தை நோக்கி நகர்வத்தினால் விக்டோரியா மாநிலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல், திருமணங்கள் போன்ற பொதுக் கூட்டங்களில் 100 பேர் வரை கலந்து கொள்ளவும் அதே நேரத்தில் 50% அலுவலக ஊழியர்கள் ஜனவரி 11 க்குள் பணியிடங்களுக்கு திரும்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கோடையில் நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் டானியல் அண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உட்புற இடங்களிலும் பொது மற்றும் வேறு போக்குவரத்துப் பயன்பாட்டின் போதும் முக்கவசங்களை அணிய வேண்டியது கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவுஸ்ரேலியாவில் ஒரே இரவில் 7 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒகஸ்ட் மாத தொடக்கத்தில் 700 நாளாந்தம் நோயாளிகளை பதிவு செய்த இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில், கடுமையான தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் மூலம் நாடு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடிந்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.