கௌதம் மேனன் படத்தில் இரட்டை வேடங்களில் சிம்பு: ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!
In சினிமா October 31, 2018 12:04 pm GMT 0 Comments 1430 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

கௌதம் மேனன்- சிம்பு கூட்டணியில் அடுத்து உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் சிம்பு, இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார்.
கௌதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
அடுத்தவருட ஆரம்பத்தில் படப்பிடிப்புக்கள் நடைபெறவுள்ள நிலையில், தற்போது இப்படத்திற்கான நடிகர்- நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தெரிவு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தக் கூட்டணி விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா என இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களைக் கொடுத்துள்ளது.
இந்தநிலையில், சிம்பு – கௌதம் மேனன் – ரஹ்மான் கூட்டணி மீண்டும் அமையவுள்ளமையானது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச்செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.