சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது- வைத்தியசாலை நிர்வாகம்
In இந்தியா January 24, 2021 6:52 am GMT 0 Comments 1337 by : Yuganthini

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவரும் அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவின் உடல்நிலை, நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளதென பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலையில் சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் சசிகலா எழுந்து நடக்கிறார். மருத்துவ சிகிச்சைக்கு சசிகலா நன்றாக ஒத்துழைக்கிறார். மேலும் அவர், வைத்தியக் கண்காணிப்பிலேயே தொடர்ந்து உள்ளார்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் இளவரசியின் உடல்நிலையும் சீராக உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.