சட்டத்தை பின்பற்றியே பொலிஸார் கடமையாற்ற வேண்டும்: கிரண்பெடி
In இந்தியா February 13, 2019 8:02 am GMT 0 Comments 1318 by : Yuganthini

நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தே பொலிஸார் தங்களின் கடமையை மேற்கொள்ள வேண்டுமென புதுச்சேரி மாவட்டத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுவை அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தி வரும் ஆளுநர் கிரண்பேடி, நேற்று (செவ்வாய்க்கிழமை) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலை நாடுகளில், சட்டத்தின் அடிப்படையிலேயே போக்குவரத்து நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பொலிஸார் மேற்கொள்கின்றனரென அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகவே இந்தியாவிலும் பொது செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது சட்டத்திட்டங்களை பொலிஸார் கடைப்பிடிப்பது அவசியமென கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பொதுமக்கள் அச்சமின்றி பொலிஸ் நிலையத்தை அணுகும் விதமாக பொலிஸார் நடந்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொலிஸ் துறைக்கான வயதெல்லையை தளத்துவது குறித்த முடிவுகளை விரைவாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்க வேண்டுமெனவும் கிரண்பேடி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.