சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தயார்!- ரஜினிகாந்த்
In இந்தியா April 19, 2019 9:54 am GMT 0 Comments 2264 by : Yuganthini

சட்டப்பேரவை தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த வாக்கு, ரஜினிக்கே என ரசிகர்கள் நேற்று ட்விட்டரில் டிரென்ட் செய்தமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “ரசிகர்களின் ஆர்வம் புரிகின்றது. ஆகையால் அவர்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்
மேலும் சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திப்பதற்கு தயாராகவே உள்ளேன்.
இதேவேளை கடந்த காலங்களை ஒப்பிடுகையில் தேர்தலின்போது விரும்பத்தகாத சம்பவங்கள் குறைவாக நடைபெற்றுள்ளதுடன் தேர்தல் ஏற்பாடுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.