சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு: ஐவர் கைது

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் தோட்ட பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொகவந்தலாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.