சண்டக்கோழி-2ல் கீர்த்தி சுரேஷை மிரட்டிய வரலட்சுமி!
In சினிமா October 16, 2018 12:26 pm GMT 0 Comments 1307 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

படையப்பாவில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் மாறுபட்ட தோற்றம் நீண்டகாலமாக பேசப்பட்டு வந்தது.
அதையடுத்து விஷாலின் திமிறு படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்த வில்லி வேடமும் அதிகளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில், சண்டக்கோழி-2 படத்தில் வரலட்சுமி நடித்துள்ள வில்லி வேடமும் ஸ்ரேயா ரெட்டி வேடத்திற்கு இணையாக இருக்கும் என்கிறார்கள்.
இதுபற்றி அப்பட நாயகி கீர்த்தி சுரேஷ் கூறுகையில், “சண்டக்கோழி-2 இல் வில்லி வேடத்தில் மிரட்டியிருக்கிறார் வரலட்சுமி.
அந்த வேடத்தில் அவரது நடிப்பைப்பார்த்ததில் இருந்தே அவரிடம் பேசுவதற்கே எனக்கு பயமாக உள்ளது. மிரட்டல் என்றால் அப்படியொரு மிரட்டல்” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.