சந்திரிகா மற்றும் சஜித் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல்
In இலங்கை November 24, 2020 5:05 am GMT 0 Comments 1618 by : Yuganthini

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் உலகிலாவிய ரீதியில் அச்சுறுத்தலாக அமைந்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கைக்கு பொருத்தமான தேசிய சுற்றுச்சூழல் கொள்கையை வகுப்பதன் முக்கியத்தும் மற்றும் உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் ஆகியவைகள் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் இட்டுள்ள பதிவிலேயே இவ்விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.