சனத் ஜெயசூரியவிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி!
In விளையாட்டு February 21, 2021 5:08 am GMT 0 Comments 1261 by : Benitlas

இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூரியவிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டமை குறித்து ஆராய்ந்து வருவதாக இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சனத் ஜெயசூரியவிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்பட்டதை காண்பிக்கும் படங்கள் வெளியானதை தொடர்ந்து கரிசனைகள் வெளியாகியுள்ளன.
சனத் ஜெயசூரியாவிற்கு எதன் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டது என வினவப்பட்ட போதே, இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வருவதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
அதிகளவு பாதிக்கப்படக்கூடிய பகுதி என தெரிவு செய்யப்பட்ட பகுதியில் சனத் ஜெயசூரிய வாழ்ந்திருந்தால் அவரை அதிகாரிகள் தெரிவு செய்திருக்கலாம் என இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
முன்னிலை பணியாளர்கள், இராணுவத்தினர், பொலிஸார், பொதுமக்களுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.