சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்

தை மாதம் முதல் நாளில் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
இதற்கமைய இன்று(புதன்கிழமை) மாலை பொன்னம்பலமேட்டில் ஒளிரும் மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சபரிமலையில் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்தே மகரஜோதி தரிசனத்தையும் ஐயப்ப பக்தர்கள் காண உள்ளனர்.
மேலும், புல்லுமேடு, பாஞ்சாலிமேடு, பாண்டித்தாவளம், பருந்துப்பாறை உள்ளிட்ட பல்வேறு மலைப் பகுதிகளுக்கும் சென்று மகர ஜோதியை ஐயப்ப பக்தர்கள் தரிசிக்க உள்ளதால், சபரிமலை சன்னிதானம் மட்டுமின்றி மற்ற மலைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.