சபரிமலை ஐயப்பன் கோவில் : பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை நிர்ணயித்தது கேரள அரசு
In இந்தியா December 3, 2020 5:14 am GMT 0 Comments 1439 by : Krushnamoorthy Dushanthini

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவதற்கு உரிய வயது வரம்பை கேரள அரசு நிா்ணயித்துள்ளது.
இதன்படி 50 வயத்திற்கு குறைவான பெண்களும், 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10 வயதுக்கும் குறைவான சிறுமிகளும் 65 வயதுக்கும் மேற்பட்ட பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று கேரள அரசு அறிவித்திருந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் தீா்ப்பளித்தது.
அந்த தீா்ப்பை அமுல்படுத்த முயன்ற கேரள அரசை எதிா்த்து பல்வேறு ஹிந்து அமைப்புகளும், ஆன்மிக அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன. பெண்களின் உரிமையை மறுக்க முடியாது என்றும் கேரள அரசு விளக்கம் அளித்தது.
ஆனால் தற்போது சபரிமலையில் இளம் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சமூக ஆா்வலா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.