சமத்துவமின்மை நீடிக்கும்!- பிரித்தானிய ஆணையம் எச்சரிக்கை
In இங்கிலாந்து May 1, 2019 8:12 am GMT 0 Comments 2452 by : Risha

அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பிரித்தானியாவில் சமத்துவமின்மை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் வளர்ச்சி குறித்து கண்காணித்துவரும் ஆணையமொன்றே இவ்வாறு எச்சரித்துள்ளது.
பிறப்பிலிருந்து வேலைத்தளம் வரை இந்த சமத்துவமின்மை நீடித்திருப்பதாகவும் குறித்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
சமத்துவமற்ற இந்த நிலையானது கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட தேக்கமுற்ற நிலையில் காணப்படுவதாக குறித்த ஆணையத்தின் தேசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்நிலையை சமாளிப்பதற்கு இளைஞர்களுக்கான கல்வி திட்டத்திற்கு மேலதிக நிதியை ஒதுக்குமாறும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச குழந்தை பராமரிப்பு சேவையை பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பரிந்துரைகள் தொடர்பாக கூடுதல் அக்கறை செலுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.