சமரசம் செய்வதற்கு அரசாங்கம் இணங்கவேண்டும்: கோர்பின்
In இங்கிலாந்து April 24, 2019 9:35 am GMT 0 Comments 2198 by : shiyani

பிரெக்ஸிற் தொடர்பாக நிலவும் சிக்கலுக்கு அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் இன்னும் கூடுதலாக சமரசம் செய்வதற்கு அரசாங்கம் இணங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இடம்பெற்று வரும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பதாக தொழிற்கட்சி மீதும் அக்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் மீதும் பிரதமர் தெரேசா மே குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த கோர்பின் கூறியதாவது;
அரசாங்கம் சிலமாற்றங்களை செய்யவேண்டி இருக்கிறது. பிரதமரின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை பின்பற்றவேண்டும் என்ற அரசாங்கத்தின் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் பாராளுமன்றத்தால் மூன்றுமுறை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்பதை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் சக்திவாய்ந்த எதிர்கால உறவு, வேலை செய்யுமிடத்தில் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் இயற்கை உலகின் பாதுகாப்பு ஆகிய அம்சங்களை பிரெக்ஸிற் ஒப்பந்தம் உள்ளடக்கிய வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.
அத்துடன் பிரெக்ஸிற்றின் பின்னரும் இந்த நாட்டில் தொழிலுக்கு அத்தியாவசியமான சந்தைகளுக்கான அணுகுமுறை, வடஅயர்லாந்தில் கடுமையான எல்லையைத் தவிர்க்கக்கூடிய சுங்க ஒன்றியம் ஆகியவையும் ஒப்பந்தத்தில் இடம்பெறவேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரெக்சிற்றுக்கு ஆதரவாகவோ எதிராகவோ மக்கள் வாக்களித்திருக்க முடியும் ஆனால் தங்கள் வேலைகளை இழப்பதற்கோ தமது சமுதாயத்தை மீண்டும் ஒழுங்கமைப்பதற்காகவோ அவர்கள் வாக்களிக்கவில்லை.
தொழிற்கட்சியின் பிரெக்ஸிற் திட்டம் சிறந்த எதிர்கால உறவை உருவாக்குவதற்காக மக்களை ஒன்றிணைக்க வல்லது என நான் நம்புகிறேன் என கோர்பின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.