சமூகவலைதளங்களில் வைரலாகும் எமியின் நிச்சயதார்த்த ஒளிப்படங்கள்!
In சினிமா May 6, 2019 10:39 am GMT 0 Comments 1809 by : Krushnamoorthy Dushanthini

மதராசப்பட்டிணம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை எமிஜாக்சனின் நிச்சயதார்த்தம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளதுடன், அதுகுறித்த ஒளிப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகின்றது.
நடிகை எமிஜாக்சன் லண்டனை சேர்ந்த ஜோர்ஜ் என்பரை காதலித்து வந்த நிலையில், அவர் கர்ப்பமாகவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இவர்களின் திருமணம் அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நேற்று அவர்களின் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விழாவில் நண்பர்கள் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.