சமூக சேவகர் இராமகிருஷ்ணன் உட்பட 21 பேருக்கு பத்மஸ்ரீ விருது! – மத்திய அரசு அறிவிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் சமூக சேவகர் எஸ்.இராமகிருஷ்ணன் உட்பட 21 பேருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்களித்த நபர்களை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மஸ்ரீ விருது வழங்கி வருகிறது. அந்தவகையில், 2020ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது இன்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.
அதில் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத்தினாளி சமூக சேவகரும் அமர்சேவா சங்கத்தை சேர்ந்தவருமான எஸ்.இராமகிருஷ்ணன் உட்பட்ட 21 பேர் பத்மஸ்ரீ விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷரீஃப், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜகதீஷ் லால் அவுஜா, கேரளாவைச் சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள் பங்கஜா ஆகியோரும் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உதவியளித்த கர்நாடக பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பாவும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.