சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்காக லிவர்பூல்- பி.எஸ்.ஜி அணிகள்
In விளையாட்டு October 24, 2018 11:40 am GMT 0 Comments 1242 by : Anojkiyan

ஐரோப்பாவிலிருக்கும் உயர்தர கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இதில் 11 முறை சம்பியன் அணியான ரியல் மெட்ரிட் அணி, ஐந்து முறை சம்பியனான பார்சிலோனா அணி, அட்லெடிகோ மெட்ரிட் அணி, ஜூவெண்டஸ், மென்செஸ்டர் யுனைடெட், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன், லிவர்பூல் என 32 முன்னணி அணிகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் எட்டு குழுக்கள் பிரிக்கப்பட்டு அதில் நான்கு அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கமைய போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் லிவர்பூல் அணியும், ரெட் ஸ்டார் பெல்கிரேட் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி, லண்டனில் அமைந்துள்ள ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரை பொறுத்தவரை லிவர்பூல் அணி வலுவான அணியாகவே காணப்படுகின்றது. ரெட் ஸ்டார் பெல்கிரேட் அணியிலும் சிறந்த வீரர்கள் இருந்தாலும், அந்த அணி குழு ‘சி’யில் வலுவிழந்த அணியாகவே காணப்படுகின்றது.
இதற்கிடையில், இப்போட்டிக்காக லிவர்பூல் அணி தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இத்தொடரில் குழு ‘சி’ யை பொறுத்த வரை, தான் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி என 3 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரெட் ஸ்டார் பெல்கிரேட் அணி
தான் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வி, ஒன்றில் சமநிலை என 3 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதேபோல குழு ‘சி’ பிரிவில் பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியும், நெபோலி அணியும் மோதுகின்றன. இப்போட்டி, பிரான்ஸில் உள்ள பார்க் டெஸ் பிரின்சஸ் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்காக பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. குழு ‘சி’ பிரிவை பொறுத்தவரை தான் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் சமநிலை என 4 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நெபோலி அணியை பொறுத்தவரை, தான் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வி, ஒன்றில் சமநிலை என 3 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.