சரத் அமுனுகம வெளிவிவகார அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார்!
In இலங்கை October 30, 2018 10:49 am GMT 0 Comments 1345 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

பிரதமர் மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தில், புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட அமைச்சர் சரத் அமுனுகம தனது கடமைகளை இன்று (செவ்வாய்க்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார்.
தனது கடமைகளை ஏற்ற அமைச்சர் சரத் அமுனுகமவை, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
இதன் பின்னர் அமைச்சின் மூத்த உறுப்பினர்களுடன் அமைச்சர் சரத் அமுனுகம கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.