சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் களமிறங்கும் பற்றிக் பிரவுன்!

பிரம்டன் நகர சபை ஆட்சிக்கான தேர்தலில் பற்றிக் பிரவுன் போட்டியிகிறார். நகர பிதா பதவிக்காக தேர்தலிலேயே அவர் களமிறங்குகிறார்.
பாலியல் புகார் காரணமாக ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய அவர் மீண்டும் தேர்தலில் களமிறங்கியுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பற்றிக் பிரவுன் தலைமை பொறுப்பில் இருந்த போது செய்யப்பட்டதாக கூறப்படும் செலவினங்கள் குறித்த ஆவணங்கள் தற்போது வெளியே கசிந்துள்ளது.
சுமார் 300,000 டொலர்கள் வரை பணியாளர்கள் மற்றும் அலுவலக விவகாரங்களுக்காக அவர் செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் 206,956 டொலர்கள் பணியாளர்களுக்காகவும், 53,271 டொலர்கள் அலுவலக விவகரங்களுக்காகவும், 16,426 டொலர்கள் தொடர்புகளுக்காகவும் பற்றிக் பிரவுன் செலவிட்டுள்ளார்.
பிரம்ரன் நகர சபை மேயராக போட்டியிடும் நிலையில், தேர்தலுக்கு முன்பாகவே இந்த ஆவணம் கசிந்துள்ளமை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.