சர்ச்சையில் சிக்கியுள்ள அபிஷேக் மற்றும் டாப்சி!

அபிஷேக் பச்சன் மற்றும் டாப்சி நடித்து வெளியாகியுள்ள ‘மன்மர்ஷியான்’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பின்றி தோல்வியடைந்துள்ளது. இதன் வசூல் ரூ.18 கோடியை கூடத்தாண்டவில்லை என்கின்றனர்.
இந்நிலையில் படத்தில் சீக்கியர்களை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அபிஷேக் பச்சன் மற்றும் டாப்சிக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக அம்பாலா சீக்கிய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அபிஷேக் பச்சன் சீக்கியர் வேடத்தில் நடித்துள்ளார். அபிஷேக் பச்சனும், டாப்சியும் தோன்றும் சில காட்சிகள் சீக்கியர்களுக்கு எதிராக உள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அபிஷேக் பச்சன் சிகரெட் பிடிப்பது போன்றும் தலையில் உள்ள டர்பனை கழற்றுவது போன்றும் காட்சி இருப்பதாக கண்டித்துள்ளனர். அத்துடன் திரையரங்கிற்கு முன்பாக போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சீக்கியர் அமைப்புகளின் நிர்வாகிகள் கூறும்போது, “படத்தில் சீக்கியர் சமூகத்தினரை கொச்சைப்படுத்தும் காட்சிகளை வைத்துள்ளனர். இது சீக்கியர்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. ‘மன்மர்ஷியான்’ படத்தை திரையரங்குகளில் திரையிடுவதை நிறுத்தும்படி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அபிஷேக் பச்சன், டாப்சி ஆகியோர் மீது வழக்கு தொடரவுள்ளோம்” என்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.