சர்வதேசமே தமிழர்களுக்கு இருக்கும் ஒரே சக்தி !-இம்மானுவேல் அடிகளார்
In இலங்கை March 15, 2018 12:21 am GMT 0 Comments 1526 by : Arun Arokianathan

இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சக்தி சர்வதேசம்தான் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மேலைத்தேய நாடுகளின் அமைப்பையும், அதன் சக்தியையும் அறியாமல் இங்குள்ள சிலர் விமர்சனம் செய்கின்றனர். அது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – நல்லூரில் நேற்று நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான புதிய சுதந்திரன் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் செய்யக்கூடியது என்ன என்பது மக்கள் மத்தியில் தெளிவாக போய்ச்சேரவில்லை என தெரிவித்துள்ளார். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த முடியாது. அந்த உண்மை எல்லோருக்கும் தெரியும் என தெரிவித்த சுமந்திரன், அமெரிக்காகூட இந்த விடயத்தை மேற்கொள்ளாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை மிகவும் வலுப்பெற்றிருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.